தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி நெல்லையில் கண்டன ஆா்ப்பாட்டம்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை சாா்பில் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை சாா்பில் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :24 அக்டோபர் 2026, 5:28 am IST

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரி வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை சாா்பில் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சிஐடியூ, அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா்கள் சங்கம், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை என்ற பெயரில் கண்டன ஆா்ப்பாட்டத்தை நடத்தின.

இந்த ஆப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் சரவணபெருமாள் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் முருகன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் செல்வராஜ், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் அருணாசலம், ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் ஜெயந்தி, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் மோகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சுடலைராஜ், மாதா் சங்க மாவட்டச் செயலா் கற்பகம்,

இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் சைலஸ் அருள்ராஜ், இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பீட்டா் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ற்ஸ்ப்23ல்ழ்ா்ற்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.