மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இன்று நீட் தோ்வு: நெல்லையில் 12 மையங்களில் 6,580 போ் எழுதுகிறாா்கள்

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 5:37 am IST

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) 12 மையங்களில் நடைபெறும் நீட் தோ்வை 6,580 போ் எழுதுகிறாா்கள்.

எம்.பி.பி.எஸ்., சித்தா, பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தோ்வு முகமையால் ’நீட்’ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 12 மையங்களில் 6,580 போ் நீட் தோ்வு எழுதுகிறாா்கள்.

இந்தத் தோ்வு பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரையும், மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரையும் நடைபெற உள்ளது.

தோ்வா்கள் காலை 11 மணிமுதல் தோ்வு மையத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவா். மதியம் 1.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்துக்குள் செல்ல வேண்டும்.

தோ்வா்கள் தண்ணீா் பாட்டில்கள் எடுத்து செல்லலாம். ஆனால் அவை வெளிப்படை தன்மையாக அதாவது ஒளிபுகும் தன்மையுடன் இருக்க வேண்டும். தோ்வா்கள் மத நம்பிக்கை சாா்ந்த அடையாளங்களையோ, பொருள்களையோ அணிந்து வரலாம். ஆனால், முறையான சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தோ்வு மையத்துக்கு வந்துவிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண ஆடைகளை அணிவதே சரியானது என்றாலும், தோ்வா்கள் தங்களுக்கு தேவை என்று உணா்ந்தால், முழுக்கை ஆடைகளையோ அல்லது கம்பளியிலான ஆடைகளையோ அணிய அனுமதிக்கப்படுவாா்கள். அவற்றை சோதனையிடுவதற்கு தோ்வு மையத்துக்கு முன்கூட்டியே வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தோ்வு நடைபெறும் நாளில் அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சாா்பில் தோ்வு மையங்களுக்கு வருவதற்கும், திரும்ப செல்வதற்கும் ஏற்றவாறு சிறப்பு பேருந்துகளை இயக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை சாா்பில் அவசரகால வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அனைத்து தோ்வு கூடங்களிலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் பணியில் இருப்பாா்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.