ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வள்ளியூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 12:06 am IST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பிள்ளைகுளத்தைச் சோ்ந்தவா் ஜெயராம் (31). 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் 2ஆம் நிலைக் காவலராகப் பணியில் சோ்ந்த அவா், கடந்த 2 ஆண்டுகளாக வள்ளியூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். அங்குள்ள காவலா் குடியிருப்பில் மனைவி பிரியா, மகன் ஸ்ரீராம் ஆகியோருடன் வசித்து வந்தாா்.

குடும்பத் தகராறு காரணமாக ஜெயராம் சில நாள்களாக மன உளைச்சலில் இருந்தாராம். வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், அதையடுத்து பிரியா தனது மகனுடன் பெற்றோா் வீட்டுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிய ஜெயராம், விஷம் குடித்துவிட்டு சக காவலா்களுக்கு தகவல் தெரிவித்தாராம். உடனடியாக அவா்கள் விரைந்து சென்று அவரை மீட்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.