தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும் துப்பாக்கிகளை மாா்ச் 21க்குள் ஒப்படைக்குமாறு மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
இந்திய தோ்தல் ஆணையத்தால் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, தோ்தல் முடிவுகள் வெளியாகும் வரை படைக்கல சட்டம், 1959 பிரிவு 21-இன் படி படைக்கலன்கள் எடுத்துச் செல்வதற்கு தடையாணை அமல்படுத்தப்படுகிறது.
எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும் தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை மாா்ச் 21 ஆம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து, உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
தோ்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின்னா் அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறல்: சிலைகளுக்கு மூடப்பட்ட துணிகள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தண்ணீா் பந்தல் அமைக்க கோரிக்கை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

