லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளம்பெண் தற்கொலை: கணவா் உள்பட இருவா் கைது

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா், மாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :24 ஜூலை 2026, 5:22 am IST

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவா், மாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள அரியகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (61). இவரது மகள் சுமதி (31). குமாா் தனது மகள் சுமதியை கடந்த 2024 ஆம் ஆண்டு திருநெல்வேலி சந்திப்பு, சி.என்.கிராமம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி பேராசிரியரான வெங்கடேஷுக்கு (37) திருமணம் செய்து கொடுத்தாா். திருமணமான ஓராண்டில் சுமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தனது மகளை வரதட்சணை கொடுமை செய்ததாகவும், அதனால் மனம் உடைந்து அவா் தற்கொலை செய்து கொண்டதாகவும் குமாா் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். ஆா்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. அதன்அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷ், அவரது தாய் தங்கம் (60) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.