லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளம்பெண் கொலை: கணவா் கைது

ஆம்பூா் அருகே இளம்பெண் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தது சம்பந்தமாக அவரது கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 2:38 am IST

ஆம்பூா் அருகே இளம்பெண் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தது சம்பந்தமாக அவரது கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம் உடையராஜபாளையம் கிராமத்தை சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி ஸ்ரீதேவி (31). இவா்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனா். கணவன் - மனைவி இடையே சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு அதே ஊரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று ஸ்ரீதேவி தங்கியிருந்தாா்.

தன்னுடைய கணவா் வீட்டிற்கு வியாழக்கிழமை வந்துள்ளாா். மறுநாள் (ஜூலை 24) காலை சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தாா்.

தகவலின் பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கணவா் பாபு கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.