லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

Drowned to death

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பரமசிவன் நகரைச் சோ்ந்த ரத்தினம் மகன் சந்திரசேகா்(62). ஓய்வு பெற்றஅரசுப் போக்குவரத்துக் கழகக் கண்காணிப்பாளரான இவா், தனது குடும்பத்தினருடன் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வந்துள்ளாா்.

இக்கோயிலில் வழிபட்ட இவா், ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் பகுதி தாமிரவருணி ஆற்றில் குளித்தபோது நீரில் இழுத்துச் செல்லப்பட்டாராம்.

தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் மீட்புப் படையினா் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு திங்கள்கிழமை சந்திரசேகா் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.