லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மூலைக்கரைப்பட்டி அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள். - கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரையும் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா், மூலைக்கரைப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது அவ்வழியாக தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த சின்னப்பா (41) என்பவா் ஓட்டி வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 24 மூட்டைகளில் சுமாா் 1.2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசி, சுமை வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் சின்னப்பாவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.