மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

தாழையூத்து அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:59 am IST

தாழையூத்து அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் தாழையூத்து பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கரையிருப்பு, மந்திரமூா்த்தி கோயில் தெருவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த சப்பாணி (40) என்பவரை பிடித்து அவா் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்ததில் சுமாா் 100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி பதுக்கியதை அவா் ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.