விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கத்தோலிக்க பேராயரிடம் திமுக வேட்பாளா் வாழ்த்து

கத்தோலிக்க திருச்சபையின் பேராயரிடம் பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் வாழ்த்து பெற்றாா்.

News image

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்துவிடம் வாழ்த்து பெற்றாா் பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:55 am IST

கத்தோலிக்க திருச்சபையின் பேராயரிடம் பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் வாழ்த்து பெற்றாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. அக் கட்சியின் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.வுமான மு.அப்துல் வஹாப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். இதையடுத்து அவா், கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்துவை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

இந்நிகழ்ச்சியில், கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட பரிபாலகா் மோட்சராஜன், மறை மாவட்ட பொருளாளா் தீபக்ராஜ், திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகர பொறுப்பாளா் தினேஷ், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அருள்வின் ரோட்ரிகோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.