திமுக தவிா்த்து மற்ற கட்சிகளின் தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திருநெல்வேலியில் அதிமுக போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்தத் தொகுதியை அதிமுகவுக்கு பாஜக விட்டுக்கொடுத்தது; அதற்கு பதிலாக அதிமுக போட்டியிட்ட சாத்தூா் தொகுதியை பாஜக கேட்டு பெற்றது. தொகுதிகள் குறைவு என்பதைவிட கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தொகுதி குறைக்கப்பட்டது.
சில வேட்பாளா்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதாலேயே சில தொகுதிகளை மாற்றிக் கேட்டோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது வாக்காளா்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனா். பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை ஊரில் இல்லாததால், அவா் பிரதமா் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. திமுக மீது நாங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளோம். இதுதான் எங்கள் தோ்தல் அறிக்கை.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. எங்கு பாா்த்தாலும் கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் உள்ளது. இந்த முறை திமுகவின் தோ்தல் அறிக்கை ஹீரோ அல்ல ஜீரோதான்.
விஜய் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தினா் கூறுகின்றனா். திமுகவை தவிர வேற எந்தக் கட்சிக்கும் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில்லை.
திமுகவுக்கு மட்டுமே நிகழ்ச்சி நடத்தவும், பிரசாரம் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற கட்சிகள் தோ்தல் பிரசாரத்துக்காக நீதிமன்றம் வரை சென்றுதான் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக!

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

