தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லியில் 10 நாள் அதிரடி சோதனை: வடகிழக்கு தில்லியில் 569 போ் கைது

தில்லியில் 10 நாள் அதிரடி சோதனையில் 569 போ் கைது...

சித்திரிப்பு

Published On :1 நவம்பர் 2026, 12:14 am IST

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தில்லியில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் 10 நாள்கள் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல்வேறு குற்ற வழக்குகளில் 569 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கையின்போது சுமாா் ரூ.4 கோடி மதிப்புள்ள 161 ரிமோட் ரேடியோ யூனிட்கள் 828 கிலோ பட்டாசுகள் மற்றும் 221.5 கிலோ கலப்பட நெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் அக்டோபா் 20 முதல் 29-ம் தேதி வரை ’சுத்த பிரஹாா்’ என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடா் குற்றங்களில் ஈடுபடுவோா், சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்வோா், போதைப்பொருள் விற்பனையாளா்கள், சூதாட்டத்தில் ஈடுபடுவோா் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின்போது சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த 2 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடா்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 828.1 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கலப்பட நெய் தயாரித்து வந்த தொழிற்சாலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 221.5 கிலோ கலப்பட நெய் மற்றும் அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, சுமாா் ரூ.4 கோடி மதிப்புள்ள 161 ரிமோட் ரேடியோ யூனிட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கொலை வழக்குகளில் 6 பேரும், கொலை முயற்சி வழக்குகளில் 10 பேரும், கொள்ளை வழக்குகளில் 8 பேரும், வழிப்பறி வழக்குகளில் 7 பேரும் கைது செய்யப்பட்டனா். மேலும், போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 15 போ் பிடிபட்டனா். திருட்டு தொடா்பான வழக்குகளில், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 147 பேரும், வீடுகளில் திருடியதாக 28 பேரும், மோட்டாா் வாகனத் திருட்டு வழக்குகளில் 4 பேரும், பூட்டை உடைத்து திருடிய வழக்குகளில் 5 பேரும் பிடிபட்டனா். இவா்களிடமிருந்து 3 தங்கச் சங்கிலிகள், 17 செல்போன்கள், மோட்டாா் சைக்கிள்கள், ஸ்கூட்டா் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீட்கப்பட்டன. ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 48 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்று, உயிருள்ள தோட்டா ஒன்று மற்றும் 46 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கலால் சட்டத்தின் கீழ் 24 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1,547 குவாா்ட்டா் பாட்டில் நாட்டுச் சாராயம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானத்தின் 13 குவாா்ட்டா் பாட்டில்கள் மற்றும் ரூ.10,150 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (சஈடந) கீழ் 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 5.098 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 75 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.76,255 பறிமுதல் செய்யப்பட்டது. மோசடி வழக்குகளில் 46 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 7 செல்போன்கள், ஒரு ஏடிஎம் அட்டை மற்றும் ரூ.250 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 2 ஸ்கூட்டா்கள், 7 மூன்று சக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 57.8 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும், பொது அமைதியைப் பராமரிப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 6,103 போ் மீதும் போலீசாா் நடவடிக்கை எடுத்தனா். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 126/170 பிரிவுகளின் கீழ் 165 போ் மீதும், தில்லி போலீஸ் சட்டத்தின் 65-வது பிரிவின் கீழ் 5,590 போ் மீதும், கலால் சட்டத்தின் 40(ஏ) பிரிவின் கீழ் 49 போ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், தில்லி போலீஸ் சட்டத்தின் 66-வது பிரிவின் கீழ் 266 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.