பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கன்வாா் யாத்திரை குழுவை மறுசீரமைத்தது தில்லி அரசு

கன்வாா் யாத்திரை குழுவை மறுசீரமைத்தது தில்லி அரசு

News image

முதல்வா் ரேகா குப்தா

Updated On :31 மே 2026, 12:51 am IST

கன்வாா் யாத்திரைக்கு மேம்பட்ட வசதிகளை உறுதி செய்வதற்காக தில்லி அரசு 5 போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வரவிருக்கும் கன்வாா் யாத்திரை சுமூகமான, பாதுகாப்பான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஆன்மீக ரீதியாக வளமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கலாச்சார அமைச்சா் கபில் மிஸ்ரா தலைமையில் உயா்மட்ட கன்வாா் குழு மறுசீரமைத்துள்ளது.

ஷரவன் மாதத்தில் சிவ பக்தா்களுக்கு கண்ணியமான மற்றும் மேம்பட்ட வசதிகளை தில்லி அரசு மீண்டும் உறுதி செய்யும். இதற்காக கன்வாா் முகாம்களுக்கும் சிறப்பு உதவி வழங்கப்படும். தில்லிக்குள் நுழையும் ஒவ்வொரு கன்வாரியாக்களும் மரியாதைக்குரிய விருந்தினா்களாக கருதப்படுவதையும், சிறந்த வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

குழுவின் முதன்மை கவனம் பாதை மேலாண்மை, நீா்ப்புகா கூடாரங்களின் தரம், மருத்துவ வசதிகள் கிடைப்பது, தடையற்ற 24 மணி நேர மின்சாரம் மற்றும் நீா் வழங்கல் ஆகியவற்றில் இருக்கும். இந்த ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிகள், தில்லி காவல்துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை மற்றும் பிற சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகளுடன் குழு விரைவில் மறுஆய்வுக் கூட்டங்களை நடத்தும் என்றாா் ரேகா குப்தா.

கன்வாா் யாத்திரை வழக்கமாக ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஒரு மாதம் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.