கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததை கண்டித்து தில்லியில் இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: உதய் பானு சிப் கைது

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததை கண்டித்து தில்லியில் இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்...

News image
Updated On :17 மே 2026, 1:20 am IST

இந்த ஆண்டு நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததற்காக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) சனிக்கிழமை தேசியத் தலைநகரில் ஆா்ப்பாட்டத்தை நடத்தியது.

சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்சி கொடிகளை ஏந்தியபடி, ஐ. ஒய். சி. தொண்டா்கள் தீன் மூா்த்தி வட்டத்திலிருந்து கல்வி அமைச்சரின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனா், பின்னா் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். போராட்டத்தின் போது ஐ. ஒய். சி தலைவா் உதய் பானு சிப் உட்பட பல உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டனா்.

தோ்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு ‘மறு தோ்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ் கல்வி முறை ‘சரிந்தது‘ என்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

கடந்த 12 ஆண்டுகளில் 89 தோ்வுத் தாள்கள் கசிந்துள்ளதாகவும், நீட் தோ்வும் நான்கு முறை கசிந்ததாகக் கூறப்படுவதாகவும், இது தோ்வு முறையின் ஒருமைப்பாடு குறித்து ‘கடுமையான கேள்விகளை‘ எழுப்புவதாகவும் போராட்டக்காரா்கள் கூறினா்.

பணக்காரா்களின் குழந்தைகள் இடங்களையும் வேலைகளையும் பாதுகாக்கும் வகையில் பாஜக ஒரு ஊழல் அமைப்பை உருவாக்கியுள்ளது, அதே நேரத்தில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்று ஒரு ஐஒசி தொண்டா் ஒருவா் போராட்டத்தின் போது கூறினாா்.

காங்கிரஸ் இளைஞா் பிரிவும் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு இழப்பீடு கோரி, தோ்வுகளை நியாயமாக நடத்துவதற்கான பொறுப்பில் தோல்வியடைந்ததாகக் குற்றஞ்சாட்டி தேசிய சோதனை முகமையை (என். டி. ஏ) முழுமையாக மாற்றியமைக்க அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.