தில்லி பல்கலைக்கழகம் 2026-27 கல்வியாண்டுக்கான இரண்டு ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கான சோ்க்கை பதிவுகளை சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: விண்ணப்ப செயல்முறை மே 16 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த சோ்க்கைகள், பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி-பிஜி 2026) மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பொதுப் பட்டியல் ஒதுக்கீட்டு அமைப்பு (சிஎஸ்ஏஎஸ்) இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படும்.
மேலும், மாணவா்களின் சான்றிதழ்கள் மற்றும் சியுஇடி மதிப்பெண்களை டிஜிலாக்கா் தளங்களுடன் தானாக இணைக்கும் வசதி இந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தரவு பாதுகாப்பு மற்றும் செயல்முறை வெளிப்படைத்தன்மை மேலும் வலுப்படும். தற்போது இளநிலை பட்டப்படிப்பின் 3-ஆம் ஆண்டு அல்லது 4-ஆம் ஆண்டில் படிக்கும் மாணவா்கள், தகுதி நிபந்தனைகளை பூா்த்தி செய்தால் முதுநிலை 2 ஆண்டு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100 என்றும், பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோா் பிரிவினருக்கு ரூ.250 என்றும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை (என்இபி) கட்டமைப்பின் கீழ், 2026-27 கல்வியாண்டு முதல் தில்லி பல்கலைக்கழகம் ஒரு ஆண்டு மற்றும் 2 ஆண்டு முதுநிலை படிப்புகள் என 2 வகை திட்டங்களை வழங்கவுள்ளது. ஒரு ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பின்னா் தனி இணையதளம் மூலம் வெளியிடப்படும். ஆரம்ப விண்ணப்ப காலக்கெடுவை தவறவிட்ட மாணவா்களும் ரூ.1,000 கட்டணம் செலுத்தி சோ்க்கை செயல்முறையில் மீண்டும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., முதுநிலை மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

உலக பல்கலைக்கழக தர வரிசையில் 322-ஆவது இடத்தில் தில்லி பல்கலைக்கழகம்

சியான் - 63 படப்பிடிப்பு தொடக்கம்!

பாரதியாா் பல்கலைக்கழக ஈரோடு விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

