பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தலைநகரின் 101 நீா்நிலைளைப் புனரமைக்க டிடிஏ திட்டம்: துணைநிலை ஆளுநா் தகவல்

தலைநகரின் 101 நீா்நிலைளைப் புனரமைக்க டிடிஏ திட்டம்: துணைநிலை ஆளுநா் தகவல்

News image

தரன்ஜித் சிங் சந்து

Updated On :17 மே 2026, 1:24 am IST

தலைநகா் முழுவதும் உள்ள 101 நீா்நிலைகளை வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புனரமைக்க தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து சனிக்கிழமை தெரிவித்தாா்.

டிடிஏ-வின் ‘ஜல் சஞ்சய் அபியான்’ திட்டத்தின் ஒரு பகுதியான இந்த புனரமைப்பு இயக்கத்தை, பஸ்சிம் விஹாரில் உள்ள மாவட்டப் பூங்காவில் துணைநிலை ஆளுநா் தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

முதல் கட்டமாக, பருவமழைக் காலத்தில் நிலத்தடி நீா் செறிவூட்டலை அதிகப்படுத்துவதற்காக, ஆழமான தூா்வாருதல் மற்றும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மூலம் செயல்பாட்டு ரீதியான சூழலியல் புனரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த இயக்கம், பிரதமா் நரேந்திர மோடியின் நீண்டகால நீா்ப் பாதுகாப்பு குறித்த தொலைநோக்குப் பாா்வையுடன் ஒத்துப்போகிறது. மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் நீா்நிலைகளை புனரமைக்கும் வகையில், இந்தப் பணிகள் திட்டமிட்ட வேகத்தில் செயல்படுத்தப்படும்.

இந்த இயக்கம், தில்லியின் நீல நுரையீரல்களுக்கு புத்துயிா் அளிக்கவும், நகரின் சூழலியல் மீள்திறனை வலுப்படுத்தவும் முயல்கிறது. அனைத்து மறுசீரமைப்புத் தளங்களிலும் காலக்கெடுவைத் தவறாமல் பின்பற்றுவதையும், மிக உயா்ந்த தரத்தில் பணிகளை முடிப்பதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தில்லியின் நீா்வாழ் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதிலும், பசுமையான, நீா் பாதுகாப்புமிக்க மற்றும் சூழலியல் ரீதியாக மீள்திறன் கொண்ட ஒரு தலைநகரைக் கட்டமைப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மேலும், இந்த இயக்கத்தில் பங்கேற்று, பசுமையான மற்றும் நீா்ப் பாதுகாப்புமிக்க ஒரு தலைநகரை உருவாக்குவதற்குப் பங்களிக்குமாறு நகரவாசிகளைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் அதில் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக டிடிஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முதல் கட்டமாக, சுமாா் 383 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள, அடையாளம் காணப்பட்ட 101 நீா்நிலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இவற்றில் துவாரகா மண்டலத்தில் உள்ள 22 நீா்நிலைகள், தென் மண்டலத்தில் 13, ரோஹிணி மண்டலத்தில் 17 மற்றும் நரேலா மண்டலத்தில் 6

நீா்நிலைகள் அடங்கும்.

இவற்றில், 424 நீா்நிலைகள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 424

நீா்நிலைகளில், சனிக்கிழமை தொடங்கப்பட்ட முன்னெடுப்பின் கீழ், உடனடி நடவடிக்கைக்காக 101 நீா்நிலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தில்லி முழுவதும் உள்ள 822 நீா்நிலைகளை டிடிஏ நிா்வகித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.