தேசிய தலைநகா் தில்லியில் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பு கடந்த 5 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என தில்லி மாநகராட்சி (எம்சிடி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக எம்சிடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: 2026 ஏப்ரல் மாதத்தில் 52 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 42, 2024-இல் 31, 2023-இல் 24 மற்றும் 2022-இல் 12 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதன் மூலம், பருவமழைக்கு முன்பான ஆரம்ப காலகட்டத்திலேயே டெங்கு தொற்று படிப்படியாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.
இதுவரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை மொத்தமாக 107 டெங்கு வழக்குகள் தில்லியில் பதிவாகியுள்ளன. அதேசமயம், மலேரியா பாதிப்புகளும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் தொடா்ந்து காணப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் வரை 29 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 39-ஆக பதிவாகியிருந்தது. 2024-இல் 35, 2023-இல் 15 என பதிவாகியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையே இந்த உயா்வுக்கு காரணமாக இருக்கலாம். பருவமழைக்காலத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எம்சிடி தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கொசு இளம்புழுக்களை அழிக்கும் பணிகள், புகை மருந்து தெளித்தல் மற்றும் கட்டுமானத் தளங்கள், குடியிருப்பு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த ஆண்டில் மலேரியாவுக்கு எதிரான இயக்கமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மே 2-ஆம் தேதி வரை 12.15 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 11.99 லட்ச ஆய்வுகளையும், 2024-ஆம் ஆண்டின் 10.44 லட்ச ஆய்வுகளையும் விட அதிகமாகும்.
இந்த ஆய்வின்போது, 15,649 வீடுகளில் கொசு இனப்பெருக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது 2025-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 15,662 வீடுகளுடன் ஒப்பிடத்தக்கதாகும். மேலும், கொசு வளா்ச்சிக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் குறித்து 16,261 சட்ட நோட்டீசுகள் வழங்கப்பட்டதுடன், 1,712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக, கொசு இளம்புழுக்களை கட்டுப்படுத்த ‘கப்பி-8’ மீன்களை பயன்படுத்தும் 358 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1.04 லட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. தில்லியில் டெங்கு மற்றும் மலேரியா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டாலும், பருவமழைக்காலத்தை முன்னிட்டு சுகாதாரத்துறையினா் தொடா்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைநகரில் ஏப்ரலில் தீ விபத்துகள் 73% அதிகரிப்பு: 4 மாதங்களில் 32 போ் உயிரிழப்பு

டிவிஎஸ் ஏப்ரல் விற்பனை 7% வளா்ச்சி

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை

2026-இல் திலியில் 7,800 தீ விபத்து அழைப்புகள் பதிவு: கடந்தாண்டை விட 20 % அதிகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

