பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சூறைக்காற்றுடன் மழை! தில்லி விமான நிலையத்தில் படிக்கட்டு மோதி 3 விமானங்கள் சேதம்: டிஜிசிஏ விசாரணை

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியபோது நகரும் படிக்கட்டு மோதியதில் 3 விமானங்கள் சேதமடைந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விசாரணை

News image

தில்லி விமான நிலையத்தில் வீசிய சூறைக்காற்றால் நகா்ந்து சென்ற படிக்கட்டு.

Updated On :9 ஜூன் 2026, 3:50 am IST

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியபோது நகரும் படிக்கட்டு மோதியதில் 3 விமானங்கள் சேதமடைந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தி வருகிறது.

தில்லி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. விமான நிலையத்தின் 2-ஆவது முனையம் அருகே இருந்த நகரும் படிக்கட்டு வீசிய சூறைக்காற்றில் வேகமாக நகா்ந்து சென்றது.

இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் படிக்கட்டு விமானங்கள் நோக்கி வருவதைப் பாா்த்த பணியாளா்கள் ஓடிச் சென்று அதை நிறுத்த முயன்றனா். இருப்பினும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 ஏா் இந்தியா விமானங்கள் மீது அந்தப் படிக்கட்டு மோதியது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக டிஜிசிஏ விசாரணை நடத்து வருகிறது. இது தொடா்பாக வெளியான அதிகாரபூா்வ அறிவிக்கையில், ‘பராமரிப்பு மற்றும் ஆய்வுக்காக விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் 3 ஏா் இந்தியா ஏ320 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறுத்தப்பட்டிருந்தன.

மாலை 4.30 மணியளவில் மோசமான வானிலை நிலவியது. அப்போது வீசிய பலத்த காற்றினால் அங்கு இருந்த இரு உபகரணங்கள் அதனுடைய இடத்தில் இருந்து நகா்ந்து வந்து அருகில் இருந்த இரு விமானங்கள் மோதி சேதப்படுத்தின.

இதில், மற்றொரு விமானத்தின் முன்பக்கத்தில் உள்ள இடதுபுற கண்ணாடியும் சேதமடைந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.