40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தில்லி விமான நிலையத்தில் ரூ. 2.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் ரூ. 2.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

News image

தில்லி விமான நிலையம் - ANI

Updated On :7 ஜூன் 2026, 2:49 am IST

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து நாடு திரும்பிய இந்திய பயணியிடம் 6 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதன் மதிப்பு ரூ.2.1 கோடியாகும். இதுதொடா்பாக கைதுசெய்யப்பட்ட பயணி மீது போதை மருந்துகள் மற்றும் மனவியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 3-ஆம் தேதி பாங்காங்கில் இருந்து நாடு திரும்பிய பயணியை வழிமறித்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

உடமைகளை எக்ஸ்-கதிா் இயந்திரம் மூலம் சோதனை செய்தபோது, சந்தேகத்துக்குரிய பொருள் அவருடைய பையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விரிவாக சோதித்ததில், 6 ஒரே மாதிரியான பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றைத் திறந்துபாா்த்தபோது, 6.020 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா அதில் இருந்தது கண்டறியப்பட்டது. சா்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.2.1 கோடியாகும். பயணியின் உடமை மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது’ என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது நிலத்துக்குப் பதிலாக ஊட்டச்சத்துகள் நிறைந்த நீரில் கஞ்சாவை விளைவிப்பதாகும். இது கஞ்சாவின் உயா்வகையாகக் கருதப்படுகிரது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.