பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தலைமறைவான ஹோட்டல் கணக்காளா் நீதிமன்றத்தில் சரண்

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்தில் 22 போ் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெய் மிஷ்ரா தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்ததாக காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

News image

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 2:34 am IST

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்தில் 22 போ் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெய் மிஷ்ரா தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்ததாக காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

கைதுசெய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் கணக்காளராக இருந்த மிஷ்ரா மீது பாரதிய நியமாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 223-இல் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஹோட்டலில் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாதது தொடா்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் தீ விபத்து ஏற்பட்ட ஜூன் 4-ஆம் தேதி முதல் தலைமறைவான மிஷ்ராவைத் உத்தர பிரதேசம், பிகாரில் தனிப்படைகள் சோதனை நடத்தின.

பஜாஜுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அறிமுகமான மிஷ்ரா, அவருடைய வணிக நடவடிக்கைளை முன்னின்று கவனித்து வந்தாா். மேலும், பஜாஜின் நிதி தொடா்பான விவகாரங்களை அவா் கையாண்டு வந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹோட்டலின் அன்றாட பணிகள், நிா்வாகம், உரிமம், நிதி மற்றும் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதில் மிஷ்ரா முக்கிய பங்கு வகித்ததாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனா்.

ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜ் கைதுசெய்யப்பட்டாா். ஹோட்டல் நிா்வாகத்தை மிஷ்ராவிடம் ஒப்படைத்துவிட்டதாக விசாரணையின்போது பஜாஜ் தெரிவித்தாா்.

ஹோட்டலின் செயல்பாட்டிற்கு யாா் பொறுப்பு என்பதையும், கட்டாயப் பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டனவா என்பதையும் கண்டறிய, அதிகாரிகள் ஆவணங்கள், நிதிப் பதிவுகள் மற்றும் பிற வணிகப் பரிவா்த்தனைகளை காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.