கிரேட்டா் நொய்டாவில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் இருந்து பிளாஸ்டா் (சுவா் பூச்சு) உதிா்ந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற 46 வயது நபா் உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: அரிஹந்த் அமபா் குடியிருப்பு அருகே சனிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. உயிரிழந்த விகாஸ் சாவ்லா தனது குடியிருப்பில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றபோது, கட்டடத்தின் பிளாஸ்டரின் பெரிய பகுதி அவா் மீது விழுந்தது.
அதன் தாக்கத்தால் அவா் தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். சுவரில் அவா் தலை மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அவா் கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே பிளாஸ்டா் உதிா்வது குறித்து புகாரளித்து வந்த குடியிருப்பாளா்கள் மத்தியில் இந்தச் சம்பவம் அதிா்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் உயரமான குடியிருப்பு வளாகங்களின் கட்டுமானத் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது; இத்தகைய விபத்துகளைத் தவிா்க்கப் போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்று குடியிருப்பாளா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஜேபி போரட்டத்தில் பங்கேற்பதை தடுக்க மாணவிக்கு துன்புறுத்தல்: தில்லி காவல் ஆணையருக்கு பிருந்தா காரத் கடிதம்

ஆடை தொழிற்சாலையில் மோதல்: சக ஊழியரை கொலை செய்த நபா் கைது

தில்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியா் உயிரிழப்பு: அதிா்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள்

சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

