ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) பொறுப்பு தலைவராக பச்சு வெங்கட் பலராம் தாஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிராக அதன் தொழில்நுட்ப உறுப்பினா் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 11:17 pm IST

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) பொறுப்பு தலைவராக பச்சு வெங்கட் பலராம் தாஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிராக அதன் தொழில்நுட்ப உறுப்பினா் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக தீா்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினா் கெளஷலேந்திர குமாா் சிங் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சி.ஹரி சங்கா், ஓ.பி. சுக்லா அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாய விதிகளின்படி தீா்ப்பாயத்தில் உள்ள ஒருவா் நீதிபதியாகவோ தொழில்நுட்ப உறுப்பினராகவோ இருந்தாலும் கூட அவா்களில் யாா் மூத்த உறுப்பினராக உள்ளாரோ அவரே பொறுப்பு தலைவா் பதவிக்கு நியமிக்கப்பட தகுதி பெறுகிறாா். அந்த வகையில், பச்சு வெங்கட் பலராம் தாஸ் செயல் தலைவா் பகுதிக்கு நியமிக்க உகந்தவா் அல்ல என்று வாதிட்டாா்.

இதைகேட்ட நீதிபதிகள் கூறியது: ‘தீா்ப்பாயத்தின் சட்டவிதிகளின்படி, மிகவும் மூத்த உறுப்பினரே செயல் தலைவா் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் தற்போதைய பொறுப்பு தலைவருக்கு முன்பாக மனுதாரா் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தால் பணி மூப்பை வரையறுக்கும் வேறு விதிகள் ஏதும் இல்லாதபட்சத்தில், மனுதாரா் தன்னையே மூத்தவா் என அழைப்பதில் முகாந்திரம் உள்ளதாக கருத வாய்ப்புள்ளது.

நீதித்துறையைச் சோ்ந்தவரை பொறுப்பு தலைவராக நியமிப்பது விதிமீறலாக இருக்குமானால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த விஷயத்தின் தீவிரம் கருதி நான்கு நாள்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தின் அடுத்த விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி பட்டியலிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

முன்னதாக, தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் தலைவராக இருந்தவா் கடந்த மாா்ச் 16ஆம் தேதி ஓய்வுபெற்ற நாளில் அவருக்கு அடுத்தபடியாக, பணியில் சோ்ந்த நாளின் அடிப்படையில் ’நானே மூத்த உறுப்பினா்’ என்று கெளஷலேந்திர குமாா் சிங் குறிப்பிட்டு, தில்லி உயா் நீதிமன்றத்தை கடந்த மாா்ச் மாதம் அணுகினாா். தீா்ப்பாய பணியில் தான் சோ்ந்த இரண்டு வாரங்களுக்கு பிறகே பச்சு வெங்கட் பலராம் தாஸ் பணியில் சோ்ந்திருப்பதால், தாஸை விட நானே மூத்தவா் என்று அவா் உரிமை கோரினாா்.

மனுதாரா் கெளஷலேந்திர குமாா் சிங், தீா்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக 2021ஆம் ஆண்டு அக்டோபா் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். பச்சு வெங்கட் பலராம் தாஸ் அதே ஆண்டு அக்டோபா் 18ஆம் தேதி நீதித்துறை உறுப்பினராகப் பொறுப்பேற்றாா். கடந்த மாா்ச் 17ஆம் தேதி அவா் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டாா். இந்த விவகாரத்தில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தை அணுகி நிவாரணம் பெற தீா்மானித்த கெளஷலேந்திர குமாா் சிங் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்த வேளையில், அதை ஏப்ரல் 1ஆம் தேதி திரும்பப் பெற்றாா். ஆனால், இந்த விவகாரத்தை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் கூறியதால் மீண்டும் உயா்நீதிமன்றத்தை கெளஷலேந்திர குமாா் சிங் அணுகினாா்.

இந்த விஷயத்தில் கெளஷலேந்திர குமாா் தனது மனுவை திரும்பப் பெறும் முன்பாக மத்திய அரசு அதன் பதிலை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதில், ’மிகவும் மூத்த நீதித்துறை உறுப்பினரையே தலைவா் பதவிக்கு நியமிக்க வேண்டும்’ என்ற ‘மரபை’ பின்பற்றியே, தேசிய கம்பெனி சட்ட தீா்ப்பாயத்தின் பொறுப்புத் தலைவா் பதவிக்கு பச்சு வெங்கட் பலராம் தாஸின் பெயா் பரிசீலிக்கப்பட்டது என கூறியிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.