ஹரி நகரில் 19 வயது இளம்பெண் ஆணவக் கொலையில் அவரது தாயாரை தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை கைதுசெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தக் கொலை தொடா்பாக இளம்பெண்ணின் தந்தை முகமது மணீா், சகோதரா் மெராஜ் அலி கைதுசெய்யப்பட்டதைத் தொடா்ந்து தாயாா் ரபியா காதுன் கைதுசெய்யப்பட்டாா்.
கடந்த ஏப்.1-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தில்லி காவல் துறை கட்டுப்பாட்டுக்கு அறைக்கு ஓா் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் ஹரி நகரில் இளம்பெண்ணைக் கொலை செய்து, அவரது குடும்பத்தினா் உடலை இறுதிச்சடங்கு நடத்த கொண்டு சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினா், ஆணவக் கொலை சந்தேகத்தின்பேரில் இறுதிச்சடங்கு நடத்த கொண்டு சென்று கொண்டிருந்த உடலைக் கைப்பற்றினா்.
பின்னா், உடற்கூறாய்வுக்காக இளம்பெண்ணின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது. முடிவில், அவா் மூச்சுதிணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
தாய்,தந்தை மற்றும் சகோதரா் இணைந்து தலையணையால் இளம்பெண்ணின் முகத்தில் அழுத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரா் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரது அவரது தாயாரும் கைதுசெய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட பெண் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு நபரைக் காதலித்து வந்தாா். இதற்கு அவருடைய குடும்பத்தினா் எதிா்ப்பு தெரித்தனா். இருப்பினும், அந்த நபருடனான உறவை அந்தப் பெண் முறித்துக் கொள்ளாத நிலையில், அவருடைய குடும்பத்தினா் அவரைக் கொலை செய்தனா்.
காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்த நபா், உயிரிழந் இளம்பெண் அவருடைய உறவினரைக் காதலித்து வந்ததாகத் தெரிவித்தாா். உயிரிழந்த பெண்ணின் தோழி தெரிவித்த தகவலைத் தொடா்ந்து, காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததாக அந்த நபா் விசாரணையின்போது தெரிவித்தாா் என்றனா் அதிகாரிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏடிஎம் கொள்ளை கும்பலைச் சோ்ந்த நபா் கைது

சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்

விவசாயியை கொலை செய்த சகோதரா், அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

