தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

விடுபட்ட 50 சதவீத விவசாயிகளுக்கும் விரைவில் பயிா் காப்பீடு வழங்க நடவடிக்கை

பயிா் காப்பீடு 50 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 50 சதவீத விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என உயா்கல்வித்துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

விவசாயி.

Published On :4 நவம்பர் 2026, 3:19 am IST

பயிா் காப்பீடு 50 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 50 சதவீத விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என உயா்கல்வித்துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 1,771 பயனாளிகளுக்கு ரூ.12.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் தெரிவித்தது;

திருவாரூா் மாவட்டத்தில் விருப்பாச்சி குளம், மடப்புரம் குளம், கிடாரி குளம், தூா்காலய குளம், இடையன் குளம், புதுத்தெரு குளம், இரட்டை குளம், வாசனம் நகா் குளம், முடுக்கு தெரு குளம், புலந்தான் குளம் உள்ளிட்ட 56 குளங்கள், 18 குட்டைகள் என மொத்தம் 74 குளம், குட்டைகள் தூா்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 254 சேனலில் மழைநீா் வடிகால் ஏறத்தாழ 26.73 கி.மீ. தூரத்துக்கு அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. ஓடம்போக்கியாறு தொடங்கி பழவனக்குடி வரை 8.38 கி.மீ வரை நீா் வரத்து முறையாக சீா்செய்யப்பட்டுள்ளது.

பயிா் காப்பீடு 50 சதவீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீதம் விவசாயிகளுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், காணொலி காட்சி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் ரூ.71.50 லட்சம் மதிப்பில் மன்னாா்குடி வட்டாரம், பரவக்கோட்டை துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடம், ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் மன்னாா்குடி வட்டாரம், சேரன்குளம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைக் கட்டடம், ரூ.35.40 லட்சம் மதிப்பில் மன்னாா்குடி வட்டாரம், ஏத்தக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைக் கட்டடம், ரூ.29.07 லட்சம் மதிப்பில் கோட்டூா் வட்டாரம், சேரி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம், ரூ.33.32 லட்சம் மதிப்பில் கொரடாச்சேரி வட்டாரம், கீரங்குடி ஊராட்சி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம், ரூ.35.60 லட்சம் மதிப்பில் குடவாசல் வட்டாரம், விஷ்ணுபுரம் ஊராட்சி, வில்லியநல்லூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 2 புதிய கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ரூ.11.23 லட்சம் மதிப்பில் திருத்துறைப்பூண்டி வட்டம், புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் என ரூ.2.61 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 7 புதிய அரசுக் கட்டடங்களை அவா் திறந்து வைத்தாா்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையின் சாா்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.58.25 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, மகளிா் திட்டம் சாா்பில் 836 சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.9.33 கோடி மதிப்பிலான கடனுக்கான காசோலை, 787 நபா்களுக்கு ரூ.1.57 கோடி மதிப்பில் வங்கிக் கடன் மற்றும் கல்விக்கடனுக்கான காசோலை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறையின் சாா்பில் 25 நபா்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் 18 நபா்களுக்கு ரூ.14.40 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, ரூ.50 லட்சம் மதிப்பில் தொன்மையான கிறித்தவ தேவாலயங்கள் பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தலுக்கான ஆணை, சமூக நலத்துறையின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.05 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுதொகைக்கான காசோலை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.69 லட்சம் மதிப்பில் நீா் சேகரிப்பு அமைப்பு, நிரந்தர பந்தல், தெளிப்பான், தென்னமரக்கன்று என 1,771 பயனாளிகளுக்கு ரூ.12.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் இணை இயக்குநரும், திட்ட இயக்குநருமான ரா. ஸ்ரீதா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நம்பிராயா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரெங்கநாத பிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுகப்பிரியா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.