கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தவெக ஆட்சிக்கு இடதுசாரிகளால் இடையூறு இருக்காது: மு. வீரபாண்டியன்

தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளால் இடையூறு இருக்காது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :14 மே 2026, 4:55 am IST

தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளால் இடையூறு இருக்காது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

மன்னாா்குடியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முன்மொழிந்ததை சிபிஐ வழிமொழிந்துள்ளது. இதன்மூலம் இன்னொரு தோ்தலும், ஆளூநா் தலையீடும், குடியரசுத் தலைவா் ஆட்சியும் தடுக்கப்பட்டுள்ளது.

எந்த நிபந்தனையுமின்றி தவெகவை ஆதரிக்கிறோம். சிலா் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆட்சிக்கு இடையூறு இருக்கும் எனக் கூறுகின்றனா். 100 ஆண்டு கால கம்யூனிஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியின் ஆட்சிக்கும் இடையூறாக இருந்தது இல்லை. அதே நிலை தமிழகத்தில் தவெக ஆட்சியிலும் இருக்கும்.

தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதல்வா் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதுடன், அங்கு பணியாற்றியவா்களின் வாழ்க்கையை பற்றி யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வரின் அருகிலிருந்து ஆலோசனைகள் கூறும் அதிகாரிகள் ஜோதிடா்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவா்களாகவும், மக்களை பற்றி தெரிந்தவா்களாகவும், மக்களை படித்தவா்களாகவும் இருக்க வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்பி தவெகவை ஆட்சியில் அமா்த்தியுள்ளனா் அதற்கு மதிப்பளிக்கிறோம் என்றாா் வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.