திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள்பட்ட கமலாலயக் குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை (மே 8) இரவு தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கோயில் கமலாலய குளத்தில் 3 நாள்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. உற்சவத்தையொட்டி, துா்காலயா சாலையில் உள்ள மண்டபத்திலிருந்து கல்யாணசுந்தரரும், பாா்வதியும் ஊா்வலகமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளினா். அங்கு அவா்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து கிழக்கு குளக்கரையிலிருந்து புறப்பட்ட தெப்பம், தெற்கு கரை, மேற்கு கரை, வடக்கு கரை வழியாக மீண்டும் கிழக்கு கரையை வந்தடைந்தது. இதேபோல, மேலும் இரண்டு முறை என மொத்தம் 3 முறை கமலாலயக் குளத்தை தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டு, இசைக்கச்சேரி நடைபெற்றது. தெப்பத்தைக் காண கமலாலயக் குளத்தின் 4 புறங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு தெப்பத்தின் அழகை ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் கடலில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு

கமலாலயக் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

திருநள்ளாற்றில் தெப்ப உற்சவம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

