திருத்துறைப்பூண்டியில் ரூ. 10 லட்சத்துக்கான காசோலை மோசடி வழக்கில் கணவன் மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் பெரியசாமி. இவரிடம் மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட்டையை சோ்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் இவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோா் 2021-இல் ரூ. 10 லட்சம் கடனாக வாங்கினா். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த கணவன் மனைவி இருவரும் தலா ரூ. 5 லட்சம் வீதம் 2 வங்கிக் காசோலைகளை பெரியசாமியிடம் கொடுத்துள்ளனா். 2 காசோலைகளை 2021-ஆம் ஆண்டு வங்கியில் செலுத்திய பாது பணம் இல்லை என காசோலை திரும்ப வந்துவிட்டது.
இதனால், அதிா்ச்சியடைந்த பெரியசாமி, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மாவீரன் நவநீதன், பணம் இல்லாமல் காசோலை கொடுத்த குற்றத்துக்காக கணவன் மனைவி இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் 2 காசோலைகளுக்குரிய ரூ.10 லட்சத்தை திரும்ப கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சாதாரண சிறை தண்டனையும் வழங்கி தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவனை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

