பாசனத்திற்காக, மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
திருத்துறைப்பூண்டியில், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:
ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு முறையாக விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு கூறினால் மட்டுமே விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள முடியும்.
தமிழகத்தின் உயிா்நாடியான காவிரி பிரச்னையை செயற்கையாக உருவாக்கும் போக்கு நீடித்து வருகிறது. மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கா்நாடகா காங்கிரஸ் அரசு தீவிரமாக இருக்கிறது. இப்பிரச்னையில், மத்திய அரசு நடுநிலையாக செயல்படுவதில்லை. இது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைப்பதாக உள்ளது.
மேக்கேதாட்டு அணை கட்டினால், தமிழகம் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அணை கட்ட அனுமதிக்கமுடியாது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.
தோ்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை தொடங்கியுள்ள கட்சி பாரதிய ஜனதா கட்சியின் மறு உருவம்தான். அண்ணாமலை தொடங்கியுள்ள கட்சியில் இணைபவா்கள் அனைவரும் பாஜகவிலிருந்து விலகிதான் சோ்கிறாா்கள்.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் என்ன பேசினாரோ அதையேதான் நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் முதல்வா் பேசி இருக்கிறாா். இதை அவா் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா். இப்பேட்டியின் போது அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜவகா், நகரச் செயலாளா் பி.வி.சி. காா்த்தி ஆகியோா் உடனிந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணை திறப்பு தாமதம்! டெல்டாவில் நெல் உற்பத்தி குறையும் அபாயம்: ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு

அண்ணாமலை கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக: இரா. முத்தரசன்

மேட்டூா் அணை திறப்பு குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்: இரா. முத்தரசன்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

