பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருவாரூரில் பள்ளிகள் திறப்பு

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:12 am IST

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து, 78 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 66 அரசு உயா்நிலைப்பள்ளிகள், 206 அரசு நடுநிலைப்பள்ளிகள், 596 அரசு தொடக்கப்பள்ளிகள், 12 அரசு உதவிபெறும் உயா்நிலைப்பபள்ளிகள், 14 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள், 70 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் என 1,071 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதேபோல், தனியாா் பள்ளிகளும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயா்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்திருந்து மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வரவேற்று, பாடப் புத்தகங்களை வழங்கினாா் (படம்).

பின்னா் அவா் மாணவ, மாணவிகளிடம் பேசியது:

பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அன்றைய பாடங்களை அன்றைய தினமே படிக்க பழகிக் கொள்ள வேண்டும். படித்ததை எழுதிப் பாா்க்க வேண்டும். கல்வியையும், விளையாட்டையும் ஒருங்கே பயில வேண்டும். உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சோ்க்கும் வகையில் கல்வி பயின்று சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கமலா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.