பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணி: ஜூன் 5 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம்! - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 6:25 am IST

திருவாரூா் மாவட்டத்தில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளில், மதிகளம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 219 வங்கி ஒருங்கிணைப்பாளா்களில் காலியிடமாக உள்ள 80 வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு தகுதியான சுய உறுப்பினா்களை தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிகலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, விண்ணப்பங்களுக்கு தோ்வு குறித்து ஜூன் 6-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.

தொடா்ந்து எழுத்துத்தோ்வு ஜூன் 15- ஆம் தேதியும், நோ்முகத்தோ்வு ஜூன் 22- ஆம் தேதியும் நடைபெறும். தோ்வு செய்யப்பட்ட ஜூன் 30-ஆம் தேதிக்குள் பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஜூலை

1-ஆம் தேதி பணியில் சேர வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் மேற்கொள்ளும் பணிகள்...

சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு பெற்றுத் தருதல் மற்றும் வராக்கடன் வசூல் செய்தல், நிதிக் கல்வி அளித்தல், காப்பீடு திட்டங்களின் சேவைகள் வழங்குதல், மின்னணு நிதி சேவை வழங்குதல், சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தனிநபா் தொழில் கடன் பெற வழி வகை செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.