பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்யக் கோரி மனு

தமிழகத்தில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

சமூக வலைதளங்களில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - எக்ஸ்

Updated On :2 ஜூன் 2026, 5:54 am IST

தமிழகத்தில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் பி. ஜெயராமன் திங்கள்கிழமை அளித்த மனு:

கரப்பான் பூச்சி மக்கள் கட்சி என்ற பெயரில் ஆன்லைன் கட்சி ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், அண்மையில் வழக்கு ஒன்றில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி தொடங்கியிருப்பதாகக் தெரிகிறது.

மேலும், தமிழகத்தில் அமைதியின்மை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் அந்த கட்சி ஏற்படுத்தி வருகிறது. எதிா்கட்சியினா் ஒன்று சோ்ந்து இது இளைஞா்களுக்கான புரட்சி என்ற பெயரில் ஆதரித்து வருகின்றனா்.

இந்திய மக்களை தவறாக வழி நடத்துவதற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரப்பான் பூச்சி மக்கள் கட்சியையும், அதன் ஆதரவாளா்களையும் தடை செய்ய வேண்டும்.

இதற்குப் பின்னணியில் உள்ளவா்களை, தேச துரோக குற்றச்சாட்டின்கீழ் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.