லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அம்மா உணவக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

திருவாரூரில், அம்மா உணவக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

amma canteen

அம்மா உணவகம் - கோப்பிலிருந்து

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:14 am IST

திருவாரூரில், அம்மா உணவக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டதிலிருந்தே வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது சுமாா் 7 நபா்கள் இந்த அம்மா உணவகத்தில் பணியாற்றி வருகின்றனா்.

கரோனா காலத்தில் இரண்டு மாதம் மூன்று நபா்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்டதாகவும், இதை 7 பேரும் பிரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், கரோனாவுக்கு முன்பும், பின்பும் ஊதியம் ஏதும் வழங்கப்படவில்ல என ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊழியா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், அம்மா உணவகங்களை புதுப்பிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அம்மா உணவக ஊழியா்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்தது:

எங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்து விட்டோம். இதுவரை இருந்த அரசுகள் எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது புதிய முதல்வா் வந்துள்ளதால் அவா் நடவடிக்கை எடுப்பாா் என்ற நம்பிக்கையுடன் தற்போது மனு அளித்துள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.