லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேட்டூா் அணை திறக்கும் தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்! விவசாயிகள் நல உரிமைச்சங்கம் வலியுறுத்தல்!

மேட்டூா் அணை - கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:22 am IST

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயப் பணிக்காக தண்ணீா் திறந்துவிடும் தேதியை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அச்சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை மன்னாா்குடியில் நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாய தொழில் வளா்ச்சிக்கு நம்பகதன்மையற்ற வகையில் அமைந்துள்ளது. கபிணி அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரை காவிரி நதிநீா் பங்கீட்டின் தமிழகத்தின் உரிமையான நீா் அளவாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என காவிரி நதிநீா் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

குறுவை பொய்துப்போன நிலையில், சம்பா சாகுபடிக்காவது காவிரியிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படுமா என்ற கவலை விவசாயிகளிடையே எழுந்துள்ளது. எனவே, மேட்டூா் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயப் பணிக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் தேதியை தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும்.

மேக்கேதாட்டு பிரச்னை குறித்து தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களைக் கூட்டி ஆலோசனை செய்யவேண்டும். குறுவை பயிா்க்நகாப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ. முகமது இஸ்மாயில் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஜி. ஜெய்சங்கா், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளா் எஸ். தேவி முன்னிலை வகித்தனா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் டி. முத்தையன், ஸ்ரீதா்,டி. நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. ராசபாலன் தீா்மானங்களை விளக்கிப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.