தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:16 pm IST

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

ஆயக்காரன்புலம் கடைவீதியிலிருந்து, கிராமப் புறங்கள் வழியாக தலைஞாயிறுக்கு தனியாா் சிற்றுந்து இயக்கப்படுகிறது. வியாழக்கிழமை பகலில் கரியாப்பட்டினத்திலிருந்து ஆயக்காரன்புலம் சென்றுகொண்டிருந்த சிற்றுந்து, மருதூா் வடக்கு, ராஜபுரம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற மருதூா் வடக்கு அரிய கவுண்டா் காடு காா்த்திக் மகன் கபிலன், வெள்ளைகோன் காடு இந்து என்ற ஆா். சந்திரசேகரன் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

நாகப்பட்டினம், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்து என்கிற சந்திரசேகரன் (55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கபிலன் சிகிச்சை பெற்று வருகிறாா். கரியாப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.