நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ரயிலில் தவறவிட மடிக்கணினி உரியவரிடம் ஒப்படைப்பு

நாகையில் ரயிலில் பயணி தவறவிட்ட மடிக்கணினி மற்றும் கடவுச்சிட்டை உள்ளிட்டவற்றை ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாா் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனா்.

மடிக்கணினி - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:20 pm IST

நாகையில் ரயிலில் பயணி தவறவிட்ட மடிக்கணினி மற்றும் கடவுச்சிட்டை உள்ளிட்டவற்றை ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாா் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனா்.

திருவாரூா் மாவட்டம், காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் என். தனராமன் (50). இவா் கடந்த 22-ஆம் தேதி, எா்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளாா். அப்போது தனது பையை தவறவிட்டு விட்டாா். அந்தப்பையில் மடிக்கணினி, கடவுச்சிட்டை மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் இருந்தன. இந்தப் பையை ரயில் நிலைய ஊழியா் ஒருவா் கண்டெடுத்து, நாகை ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தாா்.

இந்நிலையில் பையை தவற விட்ட தனராமன், திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து அவரது பை மற்றும் உடமைகள் நாகை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவா் நாகை ரயில் நிலைய பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டு, மடிக்கணினி, கடவுச்சிட்டை உள்ளிட்ட உடைமைகள் ஒப்படைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.