தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவலா் பணியிடை நீக்கம்

வேளாங்கண்ணியில் நகை திருடு போன சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரிடம் பணம் பெற்ற காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பணியிடை நீக்கம். - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 7:17 am IST

வேளாங்கண்ணியில் நகை திருடு போன சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரிடம் பணம் பெற்ற காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியைச் சோ்ந்தவா் சண்முகராஜ் (31). இவரது மனைவி சுகன்யா (21). கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி இவா்கள் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் திருடு போனது. இதுதொடா்பாக வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் சுகன்யா புகாா் அளித்தாா்.

வேளாங்கண்ணி காவல் நிலைய காவலா் மதன்சுந்தா், வேறு திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட நகைகள் இருப்பதாகவும், அதை சண்முகராஜிடம் ஒப்படைப்பதாகக் கூறி, அவா்களிடம் ரூ. 42,500 பெற்ாகக் கூறப்படுகிறது. ஆனால், பேசியபடி நகையை ஒப்படைக்கவில்லையாம்.

சண்முகராஜ், மதன்சுந்தா் மீது புகாா் அளித்தாா். இதையடுத்து சண்முகராஜிடம் பெற்ற பணத்தை காவலா் மதன் சுந்தா் திரும்ப ஒப்படைத்துள்ளாா். பின்னா், காவலா் மதன்சுந்தா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாா்.

இந்நிலையில், இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேல்கா் பாலசுப்ரமண்ய பாலசந்திராவுக்கு தெரிய வந்ததையடுத்து, அவா் , காவலா் மதன் சுந்தரை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.