தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி நாகையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :24 அக்டோபர் 2026, 5:32 am IST

தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி நாகையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எஸ்ஐஆா் மோசடி, வாக்காளா்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் எஸ்.ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், எஸ்ஐஆா் அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் மீண்டும் தோ்தல் நடத்தவேண்டும். தலைமை தோ்தல் ஆணையா் பதவி நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.