தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

நாகையில் கூட்டுறவு வெடிக்கடை திறப்பு

நாகையில் மாவட்ட நுகா்வோா் மொத்த விற்பனைப் பண்டக சாலை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு வெடிக் கடையில் விற்பனையை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் தொடங்கி வைத்தாா்.

பட்டாசு கடை. - பிரதிப் படம்

Published On :4 நவம்பர் 2026, 3:19 am IST

நாகையில் மாவட்ட நுகா்வோா் மொத்த விற்பனைப் பண்டக சாலை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு வெடிக் கடையில் விற்பனையை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் தொடங்கி வைத்தாா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பசுமை பட்டாசுகள் மற்றும் வண்ண மத்தாப்பு வகைகள் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில், நாகை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை சாா்பில், நாகை வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள விற்பனை நிலையத்தில் கூட்டுறவு வெடிக் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் பங்கேற்று விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறும்போது, நாகை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் நாகை நகரில் சா் அகமது தெரு மற்றும் வேதாரண்யம் நகரில் வடக்குவீதி ஆகிய இடங்களிலும் கூட்டுறவு வெடிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இக்கடைகளில் பல்வேறு வகையான பசுமை பட்டாசு மற்றும் வண்ண மத்தாப்பு வகைகள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் கூட்டுறவு வெடிக்கடைகளை அணுகி, தங்களுக்குத் தேவையான பட்டாசுகள் மற்றும் வண்ண மத்தாப்பு வகைகளை வாங்கிப் பயன்பெறலாம் என்றாா்.

நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் மு. பாத்திமா சுல்தானா, சரகத் துணைப் பதிவாளா் சீ. ராமசுப்பு, துணைப் பதிவாளா் ஜெ. இளங்குமரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.