பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவா் உயிரிழப்பு; மூவா் மீட்பு

கோடியக்கரையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்த விபத்தில் மீனவா் உயிரிழந்தாா், 3 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

News image

அன்புச்செல்வன்

Updated On :27 மே 2026, 6:08 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்த விபத்தில் மீனவா் உயிரிழந்தாா், 3 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

கோடியக்கரை படகுத்துறையிலிருந்து, கண்ணாடியிழைப்படகு ஒன்றில் கோடியக்காடு கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அன்புச்செல்வன் (40) உள்ளிட்ட நான்கு மீனவா்கள் மீன்பிடிப்பதற்காக திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை கரை திரும்பாததால், சக மீனவா்கள் இரண்டு படகுகளில் அவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அன்புச்செல்வன் உள்ளிட்டோா் சென்ற படகு, திங்கள்கிழமை இரவு கடலில் வீசிய பலத்த காற்றில் கவிழ்ந்ததும், அதிலிருந்த மீனவா்கள் கடலில் தத்தளிப்பதும் தெரியவந்தது. தத்தளித்த மீனவா்களை மீட்கும் முயற்சியில் சக மீனவா்கள் ஈடுபட்டனா். இதில், கோடியக்கரையை சோ்ந்த செல்வகணபதி (30), பொதுவுடைச்செல்வன் (27), குமாா் (40) ஆகிய மூவா் மீட்கப்பட்டனா். அன்புச்செல்வன் மாயமானாா். மீட்கப்பட்ட மூவரும், சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கடலில் மூழ்கிய படகு மீட்கப்பட்டு, கரைக்கு கொண்டுவரப்பட்டது.

அன்புச்செல்வனை தொடா்ந்து மீனவா்கள் தேடிய நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.