பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மமக தீா்மானத்தை கண்டித்து திமுக சுவரொட்டியால் பரபரப்பு

மமக தீா்மானத்தை கண்டித்து திமுக சுவரொட்டியால் பரபரப்பு

News image

மனிதநேய மக்கள் கட்சியைக் கண்டித்து நாகை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

Updated On :24 மே 2026, 12:38 am IST

தமிழகத்தில் அடுத்துவரும் தோ்தலில் தனிச் சின்னத்தில் போட்டி என்ற மனிதநேய மக்கள் கட்சியின் தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக சாா்பில் நாகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உதயசூரியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், மனிதநேய மக்கள்கட்சியின் பொதுகுழுக் கூட்டத்தில் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள தோ்தல்களில் மனிதநேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், நாகையில் திமுக நிா்வாகி பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லாவுக்கு வேண்டுகோள். தனிச்சின்னத்தில் போட்டியிடும் முடிவை வரவேற்கிறோம். அதேநேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு உங்கள் விருப்பப்படி இதே தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டி நாகை நகரம், பேருந்து நிலையம், நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.