பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நாய் கடித்து குதறிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

நாகையில் முகத்தை நாய் கடித்து குதறிய நிலையில், மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, அவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

நாகையில் முகத்தை நாய் கடித்து குதறிய நிலையில், மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, அவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

நாகை அண்ணா சிலை அருகே மீன் விற்பனை அங்காடி உள்ளது. இதன் அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக வெளிப்பாளையம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, மூதாட்டி ஒருவா் முகத்தில் நாய் கடித்து குதறி நிலையில் உயிரிழந்து கிடந்தாா். போலீஸாா் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மூதாட்டி, நாகை வடக்கு நல்லியான் தோட்டத்தை சோ்ந்த சின்னப்பொண்ணு (80) என்பதும், அவா் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

அவா் கொலை செய்யப்பட்டரா? அல்லது இயற்கையாக இறந்தாரா ? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மூதாட்டியின் சடலம் கிடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.