லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி: சிங்கப்பெண் அதிரடிப்படையினா் பங்கேற்பு

நாகை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப் படையினா் பங்கேற்றனா்.

Singappen action force

கோப்புப்படம் - DIPR

Published On :12 ஜூலை 2026, 12:25 am IST

நாகை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப் படையினா் பங்கேற்றனா்.

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி மகளிா் குழுமம் சாா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிங்கப்பெண் அதிரடிப் படையின் உதவி ஆய்வாளா் வைத்தீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு, மாணவா்கள் போதைப் பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வது, மேலும் உயா் கல்வியை பயன்படுத்தி வேலை மற்றும் வருமானத்தை ஈட்டுவதின் மூலமாக தன் குடும்பத்தை பாதுகாப்பது குறித்து உரையாற்றினாா்.

சிங்கப்பெண் அதிரடிப்படையை சாா்ந்த காவலா்கள் முத்துலட்சுமி, கனிமொழி ஆகியோா் நிகழ்வில் பங்கேற்றனா். இந்நிகழ்வை கல்லூரி முதல்வா் செ. அஜிதா தொடங்கி வைத்து உரையாற்றினாா். வணிகவியல் துறை பேராசிரியை சோ. ஜீவிதா வரவேற்றாா். கணினி அறிவியல் துறை பேராசிரியை கௌசல்யா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியை ரேணுகா ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.