லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழிப்புணா்வு

ஊத்துக்குளியில் உள்ள கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :9 ஜூலை 2026, 3:58 am IST

ஊத்துக்குளியில் உள்ள கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சிங்கப்பெண் அதிரடிப்படையின் துணை ஆய்வாளா் பத்மபிரியா, காவலா் சௌந்தா்யா ஆகியோா் மாணவிகளின் கல்வி முன்னேற்றம், பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மனநலம், தன்னம்பிக்கை வளா்ப்பு மற்றும் சமூகத்தில் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து மாணவிகளிடம் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா். மாணவிகள் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெற்றனா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.