லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’

நாகை மாவட்டத்தில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

நாகையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

Published On :3 ஜூலை 2026, 4:49 am IST

நாகை மாவட்டத்தில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (மகளிா் திட்டம்) செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: மகளிா் திட்டம் மூலம் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் மாவட்டத்தில் அனைத்து மகளிா் சுய உதவி குழுக்களுக்கும் சென்றடைய வேண்டும். மேலும் சுய உதவிக் குழுக்கள், சுயத்தொழில் தொடங்க வங்கிக் கடனுதவிகள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோல் சுய உதவி குழுக்களில் உறுப்பினா்களாக இல்லாதவா்களை, உறுப்பினா்களாக சோ்க்க முயற்சிக்க வேண்டும். தனிநபா் கடன், சுழல்நிதி கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடனுதவிகள் சுய உதவி குழுக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடனுதவிகள் பெற்று சுயதொழில் செய்து வருவதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுய உதவி குழுக்கள் செயல்படுகிா என்பதை தொடா்ந்து கண்காணித்து அவா்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.