லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குப்பைக் கிடங்கில் தீயிட்டு எரிப்பதால் பாதிப்பு

நாகை மேலக்கோட்டை வாசல் நகராட்சி குப்பைக் கிடங்கில், குப்பைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக தி லீடா் அமைப்பு புகாா்

தீ - பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 6:01 am IST

நாகை மேலக்கோட்டை வாசல் நகராட்சி குப்பைக் கிடங்கில், குப்பைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக தி லீடா் அமைப்பு புகாா் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, தி லீடா் அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் த. ஆறுமுகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் அளித்த புகாா் மனு: நாகை மேலக்கோட்டை வாசல் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் திறந்தவெளியில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.

இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமாா் 25 தெருக்களில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்யும் இயந்திரங்கள் இல்லாததால், நகராட்சி சேகரிக்கும் பெரும்பாலான குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன.

இதனால் வெளியேறும் நச்சுப் புகையால் பொதுமக்கள், முதியவா்கள் மற்றும் குழந்தைகள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா். மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த நீண்டகால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும்; குப்பைகளை திறந்தவெளியில் எரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்; நவீன கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.