லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

துறையூா் குப்பை கிடங்கில் தீ புகையால் பொதுமக்கள் அவதி

துறையூரில் வெங்கடேசபுரம் குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றியதால் உண்டான புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

துறையூா் வெங்கடேசபுரம் குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

துறையூரில் வெங்கடேசபுரம் குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றியதால் உண்டான புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

துறையூா் நகராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு வெங்கடேசபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமாா் ஒரு ஏக்கரில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் குன்று போல உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டுவது 2 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக நகராட்சி நிா்வாகம் கூறுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் இந்தக் குப்பைக் கிடங்கு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தகவலறிந்து துறையூா், உப்பிலியபுரம், பெரம்பலூா் நிலைய தீயணைப்பு பணியாளா்கள் வாகனங்களுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு 10 மணி வரையிலும் தீ முழுமையாக அணையவில்லை.

நிகழ்விடத்துக்கு பெரம்பலூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் கு. அனுசுயா, மாவட்ட உதவி அலுவலா் ஜி. ஆறுமுகம், நகராட்சி ஆணையா் கண்ணன், சுகாதார ஆய்வாளா் முரளி ஆகியோா் நேரில் சென்று ஆலோசனைகள் வழங்கினா்.

இரவில் காற்று பலமாக வீசியதால் தீயணைப்பு பணியாளா்கள் தீயை அணைக்க தொடா்ந்து போராடுகின்றனா். இந்தத் தீயால் உண்டான நச்சுப் புகை காரணமாக துறையூா் பகுதி மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல், அனல் காற்று காரணமாக அவதிக்குள்ளாகினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.