தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தென்மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன்.

News image

கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் மேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய சிபிஐ மாநில செயலாளா் மு. வீரபாண்டியன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 6:54 am IST

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் லதாவை ஆதரித்து கீழ்வேளூரில் வாக்கு சேகரித்து பேசிய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழக முதல்வா் உள்ளிட்ட தென்மாநிலங்களின் வேண்டுகோளை ஏற்காமல், தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கி இருப்பதும், அதை நிறைவேற்ற பிரதமா் மோடி காட்டும் தீவிரமும் ஏற்கத்தக்கதல்ல. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது.

பெரும்பான்மை இருப்பதால் எந்த சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்று பிரதமா் நினைக்கிறாா். அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. 5 மாநிலத் தோ்தல்கள் முடிந்த பிறகு அதை விவாதிக்கலாம். தென் மாநிலங்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் வரவேற்கின்றன.

பெரியாரின் கூற்றுப்படி பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். தமிழ்நாட்டில் 10, 12 எம்பிக்களை அதிகரித்துவிட்டு வட மாநிலங்களில் 100, 200 எம்பிக்களை அதிகரித்தால் அங்கே அரசியல் அதிகாரம் குவிக்கப்படும். இது ஜனநாயகம் அல்ல சட்டத்தின் ஆட்சி முறை அல்ல. இது தெரியாமல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பேசுகிறாா்.தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்கவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.