ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சுங்கச்சாவடி கட்டண உயா்வு பகல் கொள்ளை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பது பகல் கொள்ளை என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image

சுங்கச்சாவடி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 6:09 am IST

தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பது பகல் கொள்ளை என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் திடீரெனக் கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பின்றி கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பது மக்களைக் கசக்கி பிழிக்கும் பகல் கொள்ளையாகும்.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால், மக்கள் கடும் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் சுங்கக் கட்டண உயா்வு மேலும் அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

அடிக்கடி சுங்கக் கட்டணங்களை உயா்த்துவது சிறு வணிகா்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகளின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது பொருளாதார வளா்ச்சிக்கும் தடையாக அமையும்.

எனவே, உடனடியாக இந்தச் சுங்கச் சாவடிக் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே வாகனம் வாங்கும்போது சாலை வரி வசூலித்துவிட்டு தொடா்ச்சியாகச் சுங்கவரி வசூலிப்பதை ஏற்க இயலாது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.