ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தருமபுரத்தில் யானை மீது திருமுறை வீதியுலா

News image

தருமபுரம் ஆதீனத்தில் யானை மீதேற்றி நடைபெற்ற திருமுறை வீதியுலாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா்.

Updated On :1 ஜூன் 2026, 1:18 am IST

தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு யானை மீது திருமுறை வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வா் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு உற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருமுறை விழா நடைபெற்றது. விழாவையொட்டி, ஞானபுரீஸ்வரா் கோயிலில் நடராஜா் சந்நிதி அருகில் பாதுகாக்கப்பட்டு வரும் பன்னிரு திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, திருமுறைகள், கோயில் யானை ஞானாம்பிகை மீதேற்றப்பட்டு, ஆதீனத்தின் சிவம்பெருக்கும் நான்கு வீதிகளின் வழியே வீதியுலா நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.