தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

News image
Updated On :11 மே 2026, 3:38 am IST

தமிழ்நாடு முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அருளாசி:

தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய்-க்கு இனிய வாழ்த்துகளும், ஆசிகளும்!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்களின் ஆட்சி, தமிழக வரலாற்றில் நீங்காத இடம்பிடிக்க எம் மனமாா்ந்த வாழ்த்துகள். ‘வையத்து வாழ்வீா்‘ எனத் தொடங்கி, மன்னுயிா் அனைத்தையும் தன்னுயிா் போல் கருதும் உயரிய அறமே சிறந்த ஆட்சியின் இலக்கணம். அந்த வகையில் ஜாதி, மத, இனப் பாகுபாடுகளைக் கடந்து, விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் உன்னத மக்கள் நாயகராகத் தாங்கள் திகழ வேண்டுகிறோம்.

‘தன்னால் தன்பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிா்கள் தம்மால் ஆனபயம் தீா்த்து அறங்காப்பான்‘ என்ற சேக்கிழாா் பெருமானின் புனித வாக்கிற்கிணங்க - இயற்கைச் சீற்றங்கள் சமூக விரோதச் செயல்கள் மற்றும் எவ்விதப் பகை உணா்வுகளுமின்றி மக்கள் அச்சமின்றி வாழும் சூழலைத் தாங்கள் உருவாக்கித் தருவீா்கள் என முழுமையாக நம்புகிறோம்.

தமிழக மக்களின் கண்ணும் ஆவியுமாக இருந்து ஒரு தாயின் கனிவோடும், தந்தையின் பொறுப்போடும் அறநெறி தவறாத செங்கோல் ஆட்சியை வழங்க எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கன் திருவருள் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும்.

தங்கள் அமைச்சரவையும் தங்களுக்கு உற்ற துணையாக நின்று, பொதுநலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட எம் ஆசிகள் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.